Sunday, December 20, 2009

Aandal Thiruppavai

சங்கீத மாதமான மார்கழியில் விஜய் டிவி ஒளிபரப்பும் இசைநிகழ்ச்சி, `ஆண்டாள் திருப்பாவை'. திருமாலின் பெருமைகளை ஆண்டாளின் பாசுரம் வாயிலாக நல்கும் சிறந்த தமிழ் இலக்கிய படைப்பு‌த்தா‌ன் ஆ‌ண்டா‌ள் ‌திரு‌ப்பாவை. ஆண்டாள் திருமாலின் மீது கொண்டிருந்த பக்தியை 30 பாசுரங்கள் வாயிலாக வெளிப்படுத்திய படைப்பும் இதுவே.

நிகழ்ச்சியில் குழந்தைகள் மிக அழகாக உடை அணிந்து, 1,300 பாசுரங்களையும் மிக அழகாக பாட, தாமல் ராமகிருஷ்ணன் பாசுரங்களின் அர்த்தத்தை எடுத்துரைக்கிறார்.

மார்கழியின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பாசுரம் என 30 பாசுரங்களின் பெருமையையும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று வடிவங்களில் வழங்குகிறது. விஜய் டிவி. வரும் செவ்வாய் முதல் தினமும் காலை 6 மணிக்கு ஆண்டாள் திருப்பாவையை காணலாம்.

புதன் காலை 7 மணிக்கு இளம் கர்நாடக இசைப்பாடகர்களும் இளம் இசைக் கலைஞர்களும் பங்குபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்ச்சி இடம்பெறும். ஸ்மித்தா மாதவ், அபிஷேக் ரகுராம், மான்டலின் பாலாஜி, மான்ஸி பிரசாத், சிக்கில் குருச்சரண், கி.காயத்ரி, பிரசன்னா வெங்கட்ராமன், ஸ்ருதி சாகர் மற்றும் கார்த்திகா, கீர்த்தனா சகோதரிகளின் இசை நிகழ்ச்சிகள் இந்த மார்கழி மாதம் முழுவதும் வரவுள்ளது.

வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் இசைக் கருவிக‌ளி‌ன் இ‌னிய நாத‌த்துட‌ன் ஒ‌ளிபர‌ப்பாகு‌ம் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு நாளும் ஒரு இசைமேதையென காலப்பொக்கிஷங்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியன் மற்றும் மகாராஜபுரம் சந்தானம் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

Courtesy - tamil.Webdunia

No comments:

 
koffee with anu super singer jodi no 1 anu alavum bayam illai celebrating kamal's 50 vijay tv vanga pesalam kallikaattu pallkoodam maharani vijay awards vpl en peyar meenakshi yuvan vijay tv anchors kings of comedy