திருநெல்வேலி நடைபெற்ற சிகரங்களின் சங்கமம் கலை நிகழ்ச்சியை கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.
சிகரங்களின் சங்கமம் இசை உலகின் மாபெரும் கலைஞர்களான, காலத்தால் அழியாத பாடல்களை இயற்றியவரான எம்.எஸ். விஸ்வநாதன், அந்த பாடல்களுக்கு உயிரூட்டி தங்கள் குரலால் நம்மை கவர்ந்தவர்களான டி.எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு பிரத்யேகமாக சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் மூவரின் பாடல்களையும் இளைய தலைமுறை பாடகர்களான ஸ்ரீநிவாஸ், சுசித்ரா, சைந்தவி மற்றும் நவீன் ஆகியோர் மேடையில் பாடினர். இவர்களுடன் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டில் பிரபலமடைந்த போட்டியாளர்களான அஜீஷ், ரவி, ரேணு, பிரசன்னா, ராகினிஸ்ரீ ஆகியோரும் பங்குபெற்றனர்.
மேலும் திரை நட்சத்திரங்களான சங்கவி, அனுயாவின் பிரத்யேக நடனங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. புதிய மற்றும் பழைய பாடல்களுக்கு இவர்கள் நடனமாடியது நேயர்களை கவர்ந்தது. மேலும் இவர்களோடு, 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நட்சத்திரங்களான ஷெரிஃப், மனோஜ்குமார், பிரேம்கோபால், ஜெயலட்சுமி, சாய் பல்லவி மற்றும் திவ்யா ஆகியோரும் பிரபல பாடல்களான 'பொன்மகள் வந்தால்', 'ஒன்ஸ் எ பாப்பா', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய பாடல்களுக்கு நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சியை மேடையில் தொகுத்து வழங்கியவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் திவ்யதர்ஷினி. சிகரங்களின் சங்கமம் நிகழ்ச்சியின் தொகுப்புகள் டிசம்பர் 20ஆம் தேதியும் (வரும் ஞாயிற்றுக்கிழமை), டிசம்பர் 27ஆம் தேதியும் மாலை 4 மணிக்கு விஜய் டிவியில் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளது.
No comments:
Post a Comment