Sunday, December 20, 2009
It was Madhumitha's Wedding
வாரம் தோறும் திரை நட்சத்திரங்களின் திருமண் வைபவங்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் இந்த வாரம் யோகி நாயகி மதுமிதா - சிவபாலாஜி திருமண தொகுப்புகள் இடம்பெறுகிறது.
'குடைக்குள் மழை' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இங்கிலீஷ்காரன் மற்றும் தற்போது வெளியாகி இருக்கும் யோகி திரைப்படம் என இதுப்போல பல ஹிட் திரைப்படங்களில் மதுமிதா நடித்துள்ளார்.
சிவபாலாஜி, தமிழில் இங்கிளீஷ்காரன் திரைப்படத்தில் மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இருவருக்குமிடையே நட்பு துவங்கியிருந்தது. இவர் ஆரியா, சங்கராந்த்தி, அண்ணாவரம் போன்ற பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நாடோடிகள் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
மார்ச் 01, 2009 அன்று திருமணம் ஆன இவர்களை வாழ்த்த தெலுங்கு உலகின் முன்னணி நட்சத்திரங்களான வெங்கடேஷ், பவன் கல்யாண், பிரியாமணி மற்றும் பலர் இவர்களை வாழ்த்த வந்துள்ள செய்தியை சுவார்ஸ்யம் குறையாமல் இருவரும் நேயர்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
மேலும் இருவரும் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொண்ட போது, ஏதேட்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த்தை பார்த்து ஆசிர்வாதம் பெற்றது மறக்க முடியாத அனுபவம் என இருவரும் மெய்சிலிர்த்து பேசுகின்றனர்.
இவர்களின் குடுப்பத்தினரும் இவர்களின் திருமணத்திற்க்கு ஏற்பாடுகள் செய்தவற்றையும் பற்றியும் கூட இவர்கள் மனதிறந்து பேசுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 7 மணிக்கு கண்டு மகிழுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
i think it is madhumita...
in the usa the shows that happened last week are playing this week. i just noticied that bcuz alread kalikattu palikoodams episode for next week(here) is online.also there are no advertisements, they also repeat programs. see, anbe vaa goes on three times a day!i wish they could change this!:):)good job with the blog!!
Post a Comment