வரும் ஜனவரி மாதம் யுவன் சங்கர் ராஜாவின் இன்னிசை மழையில் நனையப் போகிறார்கள் சென்னைவாசிகள்.
இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் வரிசையில் யுவன் சங்கர் ராஜாவும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடக்கிறது. காணும் பொங்கல் தினமான ஜனவரி 16-ம் தேதி இசை ரசிகர்களின் உள்ளங்களை மகிழ்விக்க வரும் இந்த நிகழ்ச்சியை படு வித்தியாசமாகத் தர பாடுபட்டு வருகிறார் யுவன்.
இந்த நிகழ்ச்சிக்காக "I will be there for you..." எனும் புதிய பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலைப் பாடியபடி மேடையில் நடனம் ஆடுகிறார் யுவன்.
இளமையான புத்தம் புதிய இசையைக் கொண்டாடுவோம் என்ற முழக்கத்துடன் அரங்கேறும் இந்த இசை நிகழ்ச்சியில் முன்னணி பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், கார்த்திக், ஹரிசரண், ஹரீஷ் ராகவேந்தர், நடிகை ஆண்ட்ரியா, விஜய் யேசுதாஸ், தன்வி, மதுமிதா உள்பட பலரும் பங்கேற்று யுவனின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடுகின்றனர்.
இந்த இசை நிகழ்ச்சியின் சிறப்பு, இசைஞானி இளையராஜா பங்கேற்பதுதான். மகனின் நிகழ்ச்சியில் முதல் முறையாகப் பங்கேற்று பாடவிருக்கிறார் இளையராஜா. யுவன் இசையில் ராஜா பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். யுவனின் அசத்தலான ஸ்டில்களோடு இதற்கான ப்ரமோஷன் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment