Monday, March 8, 2010

Divya getting film chances..

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியை பார்க்காத தமிழ் ஜனம் குறைவாகவே இருக்கும். சிங்கர்களை விட அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி திவ்யாவுக்கு ரசிகர்களிடம் ரொம்பவே கிரேஸ்.

அழகாக இருக்கிறார், அற்புதமாக பேசுகிறார். சினிமாவில் நடிக்க இதுவே ரொம்ப அதிகம். திவ்யா நன்றாகப் பாடவும் செய்வார். கேட்க வேண்டுமா? தினம் நாலு பேர் திவ்யாவை தேடி வருகிறார்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு.

முதலில் மறுத்தவர் இப்போது நல்ல கதைன்னா யோசிக்கலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கும் போது கோடம்பாக்க காற்றுக்கு இந்த‌க் குயில் செவி சாய்க்காதா என்ன.

No comments:

Post a Comment